ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆதாயம் வரக்கூடிய பதவிகளை ஆளுநர் ஏற்கலாமா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு தலைவராகவும் உள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கண்ணதாசன் சமீபத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில் ஆரோவில் அறக்கட்டளையின் சட்ட விதி படி தலைவர் பதவியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ஊதியம் மற்றும் ஒய்ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். அதனால் அந்த பதவி ஆதாயம் தரக்கூடிய பதவி என்றும் இந்திய அரசியல் சாசனப்படி ஆளுநராக பதவி வகிக்க கூடியவர் இதுபோன்று ஆதாயம் வரக்கூடிய பதவிகளை பெறக்கூடாது என்றும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே ஆரோவில் அறக்கட்டளையில் தலைவர் பதவியை பெற்ற தேதியிலிருந்து தமிழக ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை ஆர்.என்.ரவி இழக்கிறார் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார்.

மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டபின் நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com