எந்தவொரு நிவாரணத்தையும் வழங்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்!

ப்ரியா
ப்ரியா

ஒரு பெரும் கனவை சுமந்துகொண்டு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக கனவு கண்டு கொண்டுருந்த ப்ரியா இருந்த தவறான ஒரு சிகிச்சை கொடுத்ததன் காரணமாக காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்ததாக சொல்லப்பட்டது. அதனால் தனது உயிரையும் இழந்துள்ளார் ப்ரியா.

இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க கோரி இரண்டு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். டாக்டர்கள் சார்பாக அந்த மனுவில், "இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை இதற்கு முன் வெற்றிகரமாக செய்துள்ளோம். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர். மாணவி பிரியா உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். சாட்சிகளை கலைக்க மாட்டோம். மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு, வலி இருப்பதாக கூறியிருந்தால் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு தெரிவிக்கவில்லை. மனுதாரர்கள் மீது காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின் காரணமாக, அவர்களது குடும்ப உறுப்பினர்களை காவல் துறையினர் துன்புறுத்துகின்றனர். எனவே அதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இதுதொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழுவின் அறிக்கையில், மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை தற்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது" என்று வாதிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது நீதிபதி, "இந்த வழக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், எந்தவொரு நிவாரணத்தையும் வழங்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர்கள் சரணடைந்து கொள்ளலாம்" என்றார்.. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரண் அடைவதற்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர்களின் குடும்பத்தினரை காவல் துறையினர் துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com