இலவச பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி
இலவச பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி

இலவச பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி மீது வழக்கு!

மதுக்கரையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டியின் மீது 4 பிரிவின் கீழ் மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை ஒரு கூட்டத்தில் " பெண்கள் ஓசியில் பயணிப்பதாக" உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்வினையாக கோவையில் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் ஓசியில் பயணிக்க மாட்டேன் என காசு கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

கோவை மாநகரில் மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி துளசியம்மாள் மகளிருக்கு அரசு பேருந்தில் பயணிக்க இலவசம் என தெரிந்தும் நடத்துநரிடம் காசை கொடுத்து டிக்கெட் கொடுக்கும்படி கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாவை பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்ய சொல்லி , அதை வீடியோவாக பதிவு செய்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவ்விவாகரத்தில் அதிமுகவை சேர்ந்த பிரிதிவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் மற்றும் மூதாட்டி துளசியம்மாள் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் மதுக்கரை போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com