ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்!

Published on

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 37 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

இந்நிலையில் ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி, ட்ரீம் 11, லுடோ, பப்ஜி ஆகிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com