ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு .....!

செல்போன்
செல்போன்

என்னதான் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும், வழிப்பறி, கொலை, கொள்ளை என குற்றங்கள் நடந்துக் கொண்டுதானிருக்கின்றன.

இரயிலில் அப்படியொரு வழிப்பறி சம்பவம் சென்னை அருகே ஓடும் ரயிலில் நடந்திருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், விவேக் குமார்(26). இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை(CISF) வீரராகப் பணி புரிந்து வருகிறார்.

இவர் பணி நிமித்தமாக மதுரைக்கு வந்து, பணிமுடிந்தபின் விஜயாவாடா செல்வதற்காக சென்னை வந்தார். விஜயாவாடாவிற்கு, கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ரயில் சென்னை கொருக்குப்பேட்டை, ஹரிநாராயணபுரம் அருகே சென்று கொண்டிருந்தது.

விவேக் குமார் ,அப்போது வாசல் அருகே நின்று கொண்டு, செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கே வந்த அடையாளம் தெரியாத நபர், விவேக் கையிலிருந்த செல்ஃபோனை பறித்துக் கொண்டு, விவேக் குமாரை ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த விவேக், சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.

அப்போது அங்கு வந்த வெங்கடேசன் எனும் சமூக ஆர்வலர், உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவலளித்தார்.அங்கே விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், பறிக்கப்பட்ட, விவேக்கின், செல்ஃபோனைத் தொடர்பு கொண்டபோது, அது தண்டவாளத்தில் கிடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. செல்போனை பிடுங்கிச் சென்ற நபர் பயத்தால், தண்டவாளத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என ரயிலவே பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம், தனது உடைமைகளனைத்தும், கோரமண்டல் ரயிலில் சென்று விட்டதாக புகாரளித்தார். அதன் பேரில், அந்த ரயில், ஆந்திர மாநிலம், 'ஓங்கோல்' ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அவரது உடைமைகள் பெறப்பட்டதாக, ரயில்வே பாதுகாப்புப் படையினர், சி.ஐ.எஸ.எஃப் வீரர் விவேக்கிடம் தெரிவித்தனர். பின்னர் வேறு ஒரு ரயிலில் விவேக்கை, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து, செல்ஃபோன் பறித்த நபரைத் தேடி வருகின்றனர்.

பேருந்தில், பேருந்து நிலையங்களில், மருத்துவ மனைகளில், என்று பொது மக்கள் கூடும் இடங்களிலெல்லாம், செல்ஃபோன் கொள்ளையடிப்பு சம்பவம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஓடும் ரயிலில் நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள் மக்களே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com