சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மையம்!

சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மையம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுப் பேசிய ஐ ஐ டி இயக்குநர் காமகோடி, இந்தியாவுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் சில முக்கியமான கருத்துகளை முன் வைத்தார். அவர் பேசியதிலிருந்து, தற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவில் அதிலுள்ள குறைபாடுகளைக் களைவதும் மிக மிக முக்கியம்.

மனிதர்கள் தங்களது ஆறாவது அறிவால் சிந்தித்து எடுக்கும் முடிவுகளை கணினி மூலம் செயற்கை முறையில் சாத்தியப்படுத்தக் கூடியது செயற்கை நுண்ணறிவின் முக்கியமான செயல்பாடாக உள்ளதால், இதன் வளர்ச்சியானது பிற்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் எனும் அச்சம் பலருக்கும் மிக அதிகமாக உள்ளது. உண்மையில் அது தேவையற்ற அச்சமாகும், செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநா் வி.காமகோடி உறுதிபடப் பேசினார்.

இந்நிகழ்வில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்புரை ஆற்றிய எண்ம இந்திய கழக நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியான அபிஷேக் சிங் ‘அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டிற்குச் சமமாக அதிலுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களையும் ஆராய வேண்டும்.

ஏனெனில் கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தற்போது வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. என்றாா் அவா்.

இந்தப் பயிலரங்கத்தில் நாஸ்காம் உள்பட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பேசினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com