கோவிட் பரிசோதனை
கோவிட் பரிசோதனை

சென்னை விமானநிலையத்தில் கோவிட் பரிசோதனை தேவை!

மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம்!

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வகை வைரஸ் தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

covid 19
covid 19

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இயக்குநருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது ஒமிக்ரான் பிஎப். 7 வைரஸ் தொற்று வகையே, திடீர் தொற்று பரவல் அதிகரிப்பிற்கு காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் குறைவாக இருந்து வரும் நிலையில், சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி வரும் கொரோனா காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர், சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கட்டாய கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட வலியுறுத்தியுள்ளார்.

இந்த புதிய வகை கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடியும் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் , பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com