நீட் தேர்வால் மகன் தற்கொலை.. துக்கம் தாங்காமல் தந்தையும் தற்கொலை!

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தந்தை, மகன்
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தந்தை, மகன்

சென்னையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சிநகரைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான செல்வம், மனைவி இல்லாத நிலையில், மகன் ஜெகதீஸ்வரனுடன் வசித்து வந்தார்.மருத்துவம் படிக்க விருப்பப்பட்ட மாணவர் ஜெகதீஸ்வரன், 2 முறை நீட் தேர்வு எழுதினார்.எனினும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் அளவுக்கு போதிய மதிப்பெண் எடுக்க முடியாததால், மீண்டும் தேர்வு எழுத முடிவெடுத்தார்.

3வது முறையாக நீட் தேர்வு எழுத பயிற்சி மையத்தில் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனகுழப்பத்தில் இருந்தார். இதனால் விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மனம் நொந்த அவரது தந்தை செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், தன் நிலைமையும், தன் மகன் நிலைமையும் யாருக்கும் வரக்கூடாது என்றும், தயவு செய்து நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மனைவி இல்லாத நிலையில், வாழ்க்கையின் ஒற்றை நம்பிக்கையாக இருந்த மகனையும் இழந்த செல்வம் தனியாக தவித்து வந்தார்.

வீட்டில் இருந்த மகன் உடனில்லையே என மனமுடைந்து காணப்பட்ட அவர், தனது மகன் இறந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் ஒரு குடும்பமே இல்லாமல் போன துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com