சென்னை மாரத்தான் போட்டி 2023! 20 ஆயிரம் பேர் பங்கேற்பு!

நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது!
சென்னை மாரத்தான் போட்டி 2023!  20 ஆயிரம் பேர் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற தி ஃபிரஷ்வொர்க்ஸ் சென்னை மாரத்தான் போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் ஸ்ரீநிவாசன் முதலிடம் பிடித்தார்.

இந்த முழு மாரத்தான் போட்டியை சென்னை நேப்பியர் பாலத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜெயந்த் முரளி தொடங்கிவைத்தார். அரை மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் தொடங்கிவைத்தனர்.

இந்த போட்டிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அது போல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இந்த போட்டியில் கலந்து கொண்டார். போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ 20 லட்சமாகும்.

இதில் ஆண்கள் பிரிவில் வினோத் குமார் ஸ்ரீநிவாசன் முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த பிரிகிட் ஜெரண்ட் முதலிடம் பிடித்தார்.

'சென்னை ரன்னர்ஸ்' அமைப்பு சார்பில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகள் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. இதில் 10 கிமீ. ஓட்டம் மட்டும் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடைகிறது. மற்ற 3 பிரிவுகளின் பந்தயங்களும் ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது.

இந்த போட்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.இந்த போட்டிகள் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது.

இந்த போட்டிகள் சென்னை ரன்னர்ஸ் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 15 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. 10 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்ற நுழைவு கட்டணமாக ரூ 1,250 ஆகும். மற்ற 3 பிரிவுகளில் போட்டியிட் ரூ 1.475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 10 கிமீ. ஓட்டம் மட்டும் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடைகிறது. மற்ற 3 பிரிவுகளின் பந்தயங்களும் ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது.

சென்னை மாரத்தானின் 11 ஆவது பதிப்பு நேற்று நடை பெற்றது. முழு மாரத்தான் (42 கி.மீ.), பெர்ஃபெக்ட் மைலர் (32 கி.மீ. ), அரை மாரத்தான் 21 கி.மீ. மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றது

முதல்முறையாக இந்த போட்டியில் பார்வை குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 பிளேடு ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 50 சக்கர நாற்காலிகள் ஓட்டப்பந்தய வீரர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இப்போட்டியில் இளைஞர்கள், பெண்கள், தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் பங்கேற்றுள்ளனர். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை 4 மணி முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியானோர் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com