ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு:  இரவு விமான பயணத்தை ரத்து  செய்த முதல்வர்!

ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு: இரவு விமான பயணத்தை ரத்து செய்த முதல்வர்!

குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்த நிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் டெல்லி செல்ல தயாராக இருந்தார்.

அப்போது ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனை அடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் டெல்லி செல்ல முடியாமல் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பினார் மு க ஸ்டாலின். இதையடுத்து, இன்று காலை வேறு விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி சென்ற பின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அன்றைய தினம் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. அதுபோல மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள நூலகமும் திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்கும், நூலகத்துக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைப்பதற்கு குடியரசுத் தலைவரை முதலமைச்சர் நேரில் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்குகிறார்.

இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, தமிழக ஆளுநர் குறித்து புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க அவர்கள் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com