முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மே 23 முதல் ஒருவார காலத்திற்கு இங்கிலாந்து ,ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 2024 ஜன.11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று, மே 7-ம் தேதி 3-ம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த சூழலில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் மே 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, ஜப்பான், சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு முதலீட்டாளர்கள் சந்திப்பை கருத்தில் கொண்டு, 4-5 நாட்கள் கொண்டதாக முதல்வரின் பயணத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதற்கிடையே, டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயணம் மேற்கொண்டுள்ளார். தொழில் துறை அதிகாரிகளும் லண்டன், ஜப்பான், சிங்கப்பூர் சென்று, தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர் 31 ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார். ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் முதலமைச்சர், அதற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டுள்ளது.

2006-11 காலகட்டத்தில் மெட்ரோ இரயில் திட்டத்திற்காக ஜப்பான் சென்ற ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு முதன்முறையாகச் செல்வது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com