ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து இருந்தனர். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போன்றோரும் ஓ.பன்னீர்செல்வத்தை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தங்களை ஆறுதலைக் கூறினர்.

தனது தாயாருக்குச் செய்ய வேண்டிய இறுதி காரியங்கள் அனைத்தையும் முடித்து விட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பி உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவை அடுத்து அவருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவருக்கு தனது ஆறுதலைக் கூறினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்,மனோஜ் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் இருந்தனர்.

logo
Kalki Online
kalkionline.com