
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் அந்தஸ்து கொண்ட இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்று பாதுகாப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எக்ஸ் 95 கை இயந்திர துப்பாக்கி, ஏ.கே. 47 இயந்திர துப்பாக்கி, பாதுகாப்பு உடை, சபாரி உடை என்று துடிப்புடன் வலம் வருகின்றனர். தினமும் காலையில் முதல்வரின் பணிகள் தொடங்கும் நிமிடத்தில் இருந்து இரவு அவர் ஓய்வெடுக்கச் செல்லும்வரை இவர்களும் உடன் இருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். முதல்வர் பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.