முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி: கமல்ஹாசன் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி: கமல்ஹாசன் திறந்து வைத்தார்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுபதாம் ஆண்டு பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், ‘எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை‘ எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் எழுபது ஆண்டுகால பயணம் குறித்தான புகைப்படக் கண்காட்சி ஒன்றும் சென்னை, பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய கமல்ஹாசன், “கலைஞர் மகனாக ஸ்டாலின் இருக்கும்போதே எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டார். அந்தக் கண்காட்சி குறிப்பேட்டில் அவர், ‘கலைஞரின் மகன் என்பதால் மாபெரும் சந்தோஷம் உண்டு. அதேபோல அவருக்கு சவால்களும் உண்டு. அந்த சவால்களை ஏற்று திமுக தொண்டனாகத் தொடங்கி, இளைஞரணி தலைவராக, மேயராக, எம்.எல்.ஏவாக , அமைச்சராக, துணை முதல்வராக, தற்போது முதல்வர் என படிப்படியாக உயர்ந்து வந்துள்ளார். கலைஞரின் மகன் எனக் காட்டிக்கொள்ளாமல், தொண்டனாக இருந்து பொறுமை காத்து, தனது திறமை மூலம் தன்னை நிரூபித்துள்ளார். தமிழர்களின் சரித்திரத்தை நினைவுபடுத்த வேண்டும். சிலர் தமிழர்களின் சரித்திரத்தை மாற்ற நினைக்கிறார்கள் அதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘அதுபற்றி இப்போது கூற முடியாது. சினிமாவில் கூட சீன் பை சீன்தான் கதையைக் கூறுவார்கள். ஆனால், நீங்கள் இப்போதே கிளைமேக்ஸ் கேட்கிறீர்களே’ என்று நகைச்சுவையாக பதில் கூறினார் கமல்ஹாசன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com