முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தென்காசிக்கு முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைப்பதற்காக சென்னையிலிருந்து தென்காசிக்கு  ரயிலில் பயணம் செய்து வந்து சேர்ந்தார்.

நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலில் முதல்வர் பயணித்தார். இந்த ரயில் இன்று காலை காலை 7.30 மணிக்கு தென்காசி வந்தடைந்தது. இதையடுத்து குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தபின், தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்று சுமார் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் கார் மூலம் ராஜபாளையம் புறப்பட்டுச் செல்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் முதல் தென்காசி ரயில் நிலையம் வரையிலான அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com