பெரியாருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை

பெரியாருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை

பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 9.00 மணியளவில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

சமூக நீதி, பெண் கல்வி, சம உரிமை மற்றும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருந்தலைவர் பெரியாரின் 144வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலகம் கட்ட, காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com