
தமிழக மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் பிரியங்கா பங்கஜம் குழந்தைகளுக்கான பிரத்யேக மனநல ஆலோசனை மையத்தை குழந்தைகள் தினத்தில் துவக்கி வைத்தார்.
குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, குடும்பத்திற்கு மிகவும் சிக்கலானதாக ஒரு விஷயமாக அமைந்து விடுகிறது என்று அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கூறியனார்கள்.
குழந்தையின் உடல் நிலை குணமடையும்போது, அவர்களின் மனநலம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனையில், மனநல ஆலோசனை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் குழந்தை மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படும். குறிப்பாக, நீண்ட கால சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளின் கல்வி என்ன செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை மையம், ஆப்பிள் என்று அழைக்கப்படும். குழந்தைகள் தினத்தில், இப்பிரிவை துவங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அவர்கள் கூறினார்.