ஆவின் கேக்
ஆவின் கேக்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்; ஆவின் கேக் அறிமுகம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆவினில் புதிதாக 4 கேக் வகைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் ஏற்கனவே 225 வகையான பால் பொருட்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி, ஆயுதபூஜை சமயங்களில் பாதுஷா உள்ளிட்ட இனிப்பு வகைகளை ஆவினில் தயாரித்து விற்பனை செய்யப் பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையை முன்னிட்டு புதிய 4 வகை கேக்குகளை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.  கிறிஸ்துமஸ் கேக் எனப்படும் பிளம் கேக்,  வெண்ணிலா, சாக்லேட் ஆகிய 4  சுவைகளில் ஆவின் கேக் அறிமுகமாகிறது.

கிறிஸ்துமஸுக்கு முன்னதாக இந்த கேக் வகைகள் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என  ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com