கக்கனின் கதாபாத்திரத்தில் நடிகராகும் கோவை தொழிலதிபர்!

கக்கனின் கதாபாத்திரத்தில் நடிகராகும் கோவை தொழிலதிபர்!

த்திப் பூத்தாற்போல் பாரதி, காந்தி, காமராஜர், போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படங்கள் வெளியான வரிசையில் தற்போது சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் கட்சியிலும் ஈடுபாட்டுடன் காமராஜர் வழிபற்றிக் கரை படியாத நேர்மை வாழ்க்கை வாழ்ந்து மக்கள் மனதில் இடம்பெற்ற எளிமை மனிதர் கக்கன் பற்றிய திரைப்படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது

சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டு வரும் “கக்கன்” திரைப்படம் இந்த மாதம் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி கக்கனாக நடித்து தயாரித்தும் இருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோசப் பேபி என்பவர். கக்கனின் உருவ ஒற்றுமையுடன் நடித்திருக்கும் இந்தத் தொழிலதிபர் நிஜத்தில் எப்படி? சொல்கிறார்கள் படத்தின் இயக்குனர்கள் பிரபு மாணிக்கம், ரகோத் விஜய்.

“சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கக்கன் அவர்கள். அத்தனை அதிகாரங்கள் கையில் இருந்தும் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்று இவரை சொல்லலாம். எளிமையின் உச்சகட்ட இலக்கணம். கக்கனின் வாழ்க்கை வரலாற்றை நாளைய இளைய தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் விதமாக கக்கன் வாழ்க்கை வரலாற்றை படமாக நாங்கள் இயக்கியது எங்களுக்கு பெருமை. அதிலும் கக்கனைப் போன்று நேர்மையுடனும், எளிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜோசப் பேபி கக்கனின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த படத்தை தயாரித்து வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜோசப் பேபி அவர்களோடு பயணித்த சில ஆண்டு காலம் அவருடைய எளிமை மற்றும் நேர்மையைக் கண்டு பிரமித்தோம். அவர் வசிக்கும் இடத்திற்கு பலமுறை சென்றிருக்கிறோம். வெறும் பத்துக்கு பத்து ரூமில் தனி மனிதனாக தனக்கான வேலைகளை தானே செய்து கொள்கிறார். உறங்குவதற்கு ஒரு நாடா கட்டில் மட்டுமே பயன்படுத்துகிறார். நாங்கள் சென்றபோதும் கூட எங்களுக்கு அவரே சமைத்து உணவளித்தார். எங்களுக்கு தெரிய ஒரு இரண்டு மூன்று வேட்டி சட்டைகள்தான் அங்கு பார்த்திருக்கிறோம். இப்படி எளிமையுடன் வாழ்ந்து வரும் ஒருவர் கக்கனின் திரைப்படத்தை தயாரித்து நடிப்பது எங்களுக்கும் பெருமையான விஷயமாக இருக்கிறது. அரசின் மிக முக்கியமான தலைவர் கக்கன் என்பதால் தவறுகள் ஏதும் நடந்து விடாத வகையில் அவரே அலசி ஆராய்ந்து 100% உண்மை தன்மையுடன் படத்தின் திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார் ” என்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com