கோவை மாணவிகளே.. ஏதாவது பிரச்னையா? போலீஸ் அக்காவை கூப்பிடுங்க!

போலீஸ் அக்கா  திட்டம்
போலீஸ் அக்கா திட்டம்

 கோயம்புத்தூரில் மாணவிகளின் உளவியல் மற்றும் பாலியல்ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண 'போலீஸ் அக்கா' என்ற புதிய திட்டத்தை அம்மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார்.

 அது என்ன ‘போலீஸ் அக்கா’ திட்டம்? கோவை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் இதுபற்றிக் கூறியதாவது:

 தமிழக காவல் துறையில் முன்மாதிரி திட்டமாக 'போலீஸ் அக்கா' என்ற புதிய திட்டம் துவக்கப் பட்டுள்ளது. இதில், அனைத்துக் கல்லூரிகளுக்கும் தொடா்பு அலுவலராக ஒரு மகளிா் காவலா் நியமிக்கப்பட்டு, அவர் அவ்வப்போது மாணவிகளுடன் கலந்துரையாடுவார்.

மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல், பாலியல்ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பது, கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு, அவா்கள் தரும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளது உள்ளிட்ட செயல்பாடுகளில் அந்தப் பெண் காவலா்கள் ஈடுபடுவாா்கள். மாணவிகள் தயக்கமில்லாமல் தங்கள் பிரச்சினைகளை போலீஸ் அக்காவிடம் எடுத்துக் கூறலாம்.

 -என்று விரிவாக எடுத்துக் கூறினார் கோவை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன்.

 கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் துணை ஆணையா் சுஹாசினி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், கோவை மாநகரில் உள்ள 60 கல்லூரிகளின் நிா்வாகிகள், போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற உள்ள 37 பெண் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com