திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் புகார்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் புகார்: எடப்பாடி பழனிசாமி!

மிழகத்தில் நடைபெற்று வரும் திமுக அரசு மீது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் 22ம் தேதி அதிமுக சார்பில் பேரணியாகச் சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க இருப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22ம் தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகில் இருந்து, பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com