ஓசியில் வரமாட்டேன் ; சர்ச்சை மேல் சர்ச்சையான பாட்டியம்மாவின் வைரல் வீடியோ!

அதிமுக ஐடி விங் மீது புகார்...
கோவை அரசுப் பேருந்து
கோவை அரசுப் பேருந்து

கோவை அரசுப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் `ஓசி தேவையில்லை' எனக் கூறும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்துகொண்டிருந்தது.

தற்போது பாட்டியம்மாவை தூண்டி வீடியோ எடுத்து பரப்பியதாக அ.தி.மு.க ஐடி விங்-மீது புகார் எழுந்திருக்கிறது. அதுவும் சர்ச்சையாகி வருகிறது.

ஏற்கனவே அரசுப் பேருந்தில் மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக, அமைச்சர் பொன்முடி `ஓசி' என்று ஒரு பொது கூட்டத்தில் கூறியது சமூகவலைத்தளங்களிலும், பொது மக்களிடையேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அதன் பின்னர் நேற்று முன்தினம் கோவை அரசுப் பேருந்தில் பயணித்த துளசியம்மாள் என்கிற மூதாட்டிக்கு நடத்துனர் இலவச பயணச் சீட்டு கொடுத்திருக்கிறார்.

அதை வாங்க மறுத்த மூதாட்டி, ``நான் ஓசில வர மாட்டேன். காசு வாங்கலைனா எனக்கு டிக்கெட் வேண்டாம். நான் இப்படித்தான் வருவேன் வேண்டாம்னா வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.

நடத்துனர் இலவசப் பயணம்தான் என பலமுறை வலியுறுத்தியும், “எனக்கு ஓசி தேவையில்லை” என்று மூதாட்டி துளசியம்மாள் பணம் கொடுத்து பயணம் செய்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில், ``அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தான் மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வைரல் ஆக்கியுள்ளார் என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தற்போது ட்வீட் செய்துள்ளார்.

எது எப்படியோ பாட்டியம்மாவும் , அமைச்சரின் சர்ச்சை பேச்சும் , வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பொதுமக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com