யானைப் பசிக்கு சோளப்பொறி - சீறும் செல்லூர் ராஜூ! 

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அ.தி.மு.கவின் போராட்டதிற்குப் பயந்துதான் பொங்கல் பரிசை, தி.மு.க அறிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் கரும்பு கிடையாது என்றார்கள். நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்ததும் அவசர அவசரமாக கரும்பு கொள்முதல் செய்வதை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று விளாசுகிறார், செல்லூர் ராஜூ 

சென்ற அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜூ. மதுரையில் வைகை ஆற்றுத் தண்ணீரை காப்பாற்ற இவர் கொண்டு வந்த தெர்மோகோல் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடும் எதிர்ப்பலைகளுக்கு பின்னரும் வெற்றி பெற்றவர். தற்போது எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருக்கிறார்.  

புத்தாண்டை முன்னிட்டு நேற்று மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ,  தி.மு.க அரசின் இலவச அறிவிப்புகளையும் வரி விதிப்புகளையும் கிண்டலாக விமர்சனம் செய்தார். '33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்து, அதில் எத்தனை அடி பொதுமக்களுக்கு எப்படி வழங்குவதார்கள் என்பது தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு என்பதையும் குறிப்பிடவேண்டும்' என்றார்.  

தி.மு.க அரசு, பொருட்களின் விலைகளை ஏற்றிவிட்டு, பொங்கல் பரிசு அறிவித்ததிருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொறி என்றுதான் சொல்லவேண்டும் என்றவர், 'திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், சிலிண்டருக்கு மானியமாக மாதம் 100 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். அப்படியென்றால் ஒவ்வொருவருக்கும் திமுக அரசு இதுவரை 22 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், இதுவரை கொடுக்கவில்லை என்றார்.  

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக தி.முக அரசு தந்த வாக்குறுதியை மறந்த நிலையில் பெண்களுக்கு 22 ஆயிரம் ரூபாயை அரசு பாக்கி வைத்திருப்பதாக சொல்லி, செல்லூர் ராஜூ ஞாபகப்படுத்துகிறாரே என்று உடன்பிறப்புகள் நெளிகிறார்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com