ஸ்டார்ட் அப் நிறுவனங்ளை  ஏமாற்றி  நூதன முறையில் ஊழல்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்ளை ஏமாற்றி நூதன முறையில் ஊழல்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடுகளை பெற்றுத் தரும் முதலீட்டுத் திருவிழா என்று கூறி உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நூதன முறையில் ஊழல் நடந்துள்ளது.

வழக்கமாக நடந்து வரும் நிறுவன முறைகளிலிருந்து விலகி, வித்தியாசமான யோசனைகளுடன் புதுமையாகத் துவங்கும் நிறுவனங்களை 'ஸ்டார்ட் அப்' என்று அழைப்பார்கள். உலகெங்கிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்களும் தயாராக உள்ள நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நூதன முறையில் ஊழல் நாடகம் உத்தரப்பிரதேசம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.

லூக் தல்வார் மற்றும் அர்ஜுன் சௌத்ரி என்பவர்கள் புது தில்லியைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர்கள். கடந்த ஜனவரி 14 முதல் 16ஆம் தேதி வரை சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு என்ற நிகழ்ச்சியை நொய்டாவில் நடத்துவதாக அறிவித்தனர். அதன் பிறகு இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 24 முதல் 26ஆம் தேதி வரை நடக்கும் என ஒத்திவைக்கப்பட்டது.

இதை உலகிலேயே பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் திருவிழாவாக அறிவித்து, கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோருடன், சர்வதேச தலைசிறந்த முதலீட்டு நிறுவனங்களான 'டைகர் குளோபல்' மற்றும் 'சிகோயா' என்ற இரு நிறுவனங்களும் பங்கேற்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த அறிவிப்புகள் சார்ந்த புகைப்படங்களில் மத்திய அமைச்சரான நிதின் கட்கரியின் புகைப்படங்களும் இடம்பெற்றது.

எனவே இந்த மாநாடு நம்பகத்தன்மை வாய்ந்தது என அனைவரும் நினைத்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்க ஒரு ஸ்டார்ட் நிறுவனத்திற்கு ரூபாய் 8000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் டிக்கெட் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் சொன்னது போலவே கடந்த மார்ச் மாதம் 24 முதல் 26 வரை இந்த மாநாடு நடந்தது. ஆனால் இவர்கள் விளம்பரங்களில் குறிப்பிட்ட சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் போன்ற எவரும் இதில் பங்கேற்கவில்லை. எனவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம் தொழில் முனைவோர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த நூதன ஊழல் எப்படி நடந்தது என்பது பற்றி போலீசாரம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "ஒருவனை ஏமாற்றுவதற்கு அவனுடைய ஆசையைத் தூண்டினால் போதும்" இந்த வருஷம் மெய்பித்தது போல நடந்துள்ள இந்த ஊழல் சம்பவம், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com