கியூ ஆர் கோடு’டன் நாள்காட்டிகள் தயாரிப்பு!

கியூ ஆர் கோடு’டன் நாள்காட்டிகள் தயாரிப்பு!

சிவகாசியில் 2023-ஆம் ஆண்டுக்கான ‘கியூ ஆர் கோடு’டன் தயாரான புதுமையான நாள்காட்டிகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல் நாளில் அச்சிடப்பட்ட ‘கியூ ஆர் கோடை’ கைப்பேசியில் ‘ஸ்கேன்’ செய்தால் அந்த நாளின் சிறப்புகளை இரண்டு நிமிஷ வீடியோவில் பார்க்கலாம். இதே போல ஒரே நாளில் இரு விழாக்கள் வந்தால் அந்தத் தேதியில் ‘இரு கியூ ஆர் கோடு’ அச்சிடப்பட்டிருக்கும். இவற்றைத் தனித் தனியாக கைப்பேசியில் ‘ஸ்கேன்’ செய்தால் அந்தந்த விழாக்களின் சிறப்புகளைக் கைப்பேசி வீடியோவில் காணலாம்.

மேலும், தேசத்தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களின் பிறந்த நாளன்று உள்ள தேதியில் அச்சிடப்பட்ட கியூ ஆர் கோடு மூலம் அவர்கள் குறித்து முழு விவரங்களை வீடியோக்களில் தெரிந்துகொள்ளலாம். இதேபோல 2023ஆம் ஆண்டுக்கான 365 நாட்களுக்கான தகவல்களை உள்ளடக்கிய வீடியோக்களை கியூ ஆர் கோடு மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த நாள்காட்டிகள் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com