முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம்; சசிகலாவை விசாரிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை!

 ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சில தகவல்கள்;

 ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டது பொய்யான அறிக்கை, மேலும் அவருக்கு .ஏற்பட்ட உடல்நலக்குறைவு, அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை மருத்துவமனை வெளிப்படுத்தவில்லை.

மேலும் ஜெயலலிதா இறந்ததாகக் குறிப்பிடப்பட்ட  நேரம் விஷயத்திலும் குழப்பம் நீடிக்கிறது. ஆகவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும்.

மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா,  கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும்.

 -இவ்வாறு ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இன்று சட்டப்பேரவையில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com