திருச்சி மற்றும் சேலத்திலும்  நகர்ப்புற வளர்ச்சி குழுமம் தொடங்க முடிவு

திருச்சி மற்றும் சேலத்திலும் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் தொடங்க முடிவு

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நகரின் வளர்ச்சிக்கான திட்டமிடும் முகமையாகும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 1972-ல் உருவாக்கப்பட்டு 1971-ம் வருடத்திய தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வ அமைப்பாக மாறியது.

இக்குழுமம், சென்னை பெருநகர் பரப்பின் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு , அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயார் செய்து அளித்தல்.

சென்னை பெருநகர் பரப்பிற்கு வரைவு திட்டம் ஆயத்தம் செய்தல்; விரிவான கட்டமைப்பு திட்டம் ஆயத்தம் செய்தல்; புதிய நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் பெருநகர் வளர்ச்சி குழுமம் உள்ளது. இதேபோன்று மதுரை, கோவை போன்ற நகரங்களில் திட்டமிடல் பணிக்காக, புதிய குழுமங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருச்சி, சேலத்திலும் புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தும் பணிகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தொடங்கி உள்ளது.

இதன் முதல் கட்டமாக, மதுரை, கோவை, திருப்பூர். ஓசூர் நகரங்களுக்கு, புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் இந்த குழுமங்கள் செயல்பட உள்ளன. 

மேலும், திருச்சி மற்றும் சேலத்திலும் புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் தொடங்கப்படும்' என அரசு அறிவித்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். 

இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ. போன்று தனித்து செயல்படும் வகையில், மதுரை, கோவை, திருப்பூர் ஒசூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

அதன் தொடர்ச்சியாக திருச்சி - சேலத்திலும் நகர்புற வளர்ச்சிப் பணிக்காக புதிய குழுமங்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நகர்ப்புற வளர்ச்சிப் பணியில் இதுவரை இருந்து வந்த தடைகள் கட்டுப்பாடுகள் இன்றி தனியான நிர்வாக அமைப்பாக இந்த குழுமங்கள் செயல்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com