நயன் விக்கி ஜோடி சட்டத்தை மீறியதா? வக்கீல் ரமேஷ் விளக்கம்!

நயன்-விக்கி
நயன்-விக்கி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ம்தேதி திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2 ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

இவர்களுக்கு திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதால் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இது பல்வேறு சர்ச்சைகளையும் கிளறி இருந்தது.

இது குறித்தான சட்ட சிக்கல்களை வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் விளக்கியுள்ளார். இவர் வாடகைத்தாய் முறையின் சட்ட சிக்கல்களை குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.

இந்த சட்டத்துக்கான அறிவிக்கையை 2021 டிசம்பரில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இந்த சட்டத்தின் பிரிவு 53 ஒரு சலுகையை வழங்கியிருக்கிறது. அதாவது இந்த சட்டம் அமலாகும் காலத்திலிருந்து 10 மாதங்களுக்கு gestation period என்ற விதிவிலக்கு தந்திருக்கிறார்கள். சட்டம் வருவதற்கு முன்போ, அந்த நேரத்திலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்திருந்தவர்கள் எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் உரிமையுடன் தங்கள் குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கான சலுகைக் காலம் இது.

இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். என்னதான் வாடகைத்தாய் முறைப்படுத்தல் சட்டம் ஜனவரி 25-ம் தேதி அமலாகிவிட்டாலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் 2022 ஜூன் 21-ம் தேதி அன்றுதான் வெளியிட்டது. அதன்பிறகு 90 நாட்களுக்குள் தேசியஅளவில் National Surrogacy Board என்ற அமைப்பும், மாநில அளவில் State Surrogacy Board என்ற அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் வசதிகளைக் கொண்ட கருத்தரிப்புமையங்கள் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை இந்த அமைப்பு கண்காணித்து முறைப்படுத்தும். சட்டமீறல்கள் பற்றிவிசாரித்து நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்

இந்த எல்லா சட்ட நடைமுறைகளும் நடந்து முடிந்தால்தான் இந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அர்த்தம். தமிழகத்தில் சமீபத்தில்தான் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டது என வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

எனவே அக்டோபர் 25 வரை குழந்தை பெற்றுக் கொள்பவர்களைஇந்த சட்டம் கட்டுப்படுத்தாது. எனவே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இந்தசட்டத்தை மீறவில்லை என பரபரப்புக்கு முற்று புள்ளி வைத்தார். எது எப்படியோ இனியாவது நயன் மற்றும் விக்கியை சமூக வலைத்தளங்களில் உருட்டுவது குறையும் என எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com