தமிழக பாஜக பொறுப்பில் இருந்து திலீப் கண்ணன் விலகல்!

தமிழக பாஜக பொறுப்பில் இருந்து திலீப் கண்ணன் விலகல்!

மிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சொந்தக் கட்சியில் இத்தனை ஆண்டுகள் உழைத்தவனை உளவு பார்ப்பதுதான் அண்ணாமலையின் வேலை. நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பது கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்குத் தெரியும். பதவிக்கு வந்தபோது, ‘ஐநூறு தலைவர்களை உருவாக்குவேன்’ என்று சொல்லி அண்ணாமலை பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற இருபது மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார். தன்னை சுத்தமானவர், நேர்மையானவர் என்று சொல்கிற அவர் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை ஏன் கட்சியில் வைத்துள்ளார்? தன்னை விட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு பெற்ற கே.டி.ராகவனை முதலில் அவர் காலி செய்தார். ராகவன் மீது இதுவரை எந்தப் பெண்ணும் புகார் அளிக்கவில்லை.

அடுத்ததாக நைனார் அண்ணனை ஒரு மனிதனாகக் கூட அவர் மதித்தது இல்லை. மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையின் உள்ளே வைத்துக்கொண்டு அசிங்கமாக போலீஸ் தோரணையில் ஏளனமாகப் பேசுவது, இவர் வந்துதான் எல்லாவற்றையும் கிழிச்ச மாதிரி கம்பு சுத்துறானுங்க. இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கிக் கொண்டாடி இருப்பான். அண்ணன் முருகன் பாஜக தலைவராக இருக்கும்போது மாற்றுக் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்களைக் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?

இதுவரை இந்தக் கட்சிக்கு என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கேன். என்னை எப்படியும் திட்டித் தீர்ப்பீர்கள். அதற்கு முன்னால் ஒரு சித்தாந்தவாதியே இப்படி போறானே, தவறு எங்கே நடக்குதுனு ஒரு முறை யோசிச்சிட்டு திட்டுங்க. இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று திலீப் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com