குழந்தை திருமணம் மண்டபத்தில் செய்ய அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அபராதம் ! மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை!

குழந்தை திருமணம் மண்டபத்தில் செய்ய அனுமதித்தால்  2 ஆண்டுகள் சிறை தண்டனை அபராதம் ! மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் மண்ட உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21. இருந்தும் நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருவது சட்டப்படி தவறாகும்

இது குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்.

18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் நடத்தும் உரிமையாளர்கள் தங்களது திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த வருவோர்களிடம் மணமகன், மணமகள் ஆகியோரின் வயதை நிரூபிக்கும் சான்றுகளை அவசியம் பெற வேண்டும்.

அதில் 18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அதுகுறித்து தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும். அதன் சம்மந்தமாக புகாரும் கொடுக்கலாம்.

Arrest
Arrest

அவ்வாறு தகவல் தெரிவிக்காமல் திருமணம் நடப்பதாக தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்பவர்கள் மீது குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன்படி அவர்கள் குழந்தை திருமணம் நடைபெற உடந்தையாக இருந்ததாக கருதப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அதேபோல் கோவில்களில் திருமணம் நடத்த பதிவு செய்ய வருபவர்களிடம் கோவில் செயல் அலுவலர்கள் அவசியம் வயது சான்று பெற்று, 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும். குழந்தை திருமணம் குறித்து அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும்

மேலும் ஊராட்சி தலைவர்கள் குழந்தை திருமணம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் இதுபற்றிய புகார்களை குழந்தைகள் உதவி மையத்தை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 04366 290445 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com