ஓ.பி.எஸ்ஸை கைவிட்ட தி.மு.க அரசு; அரசு ஊழியர்களுக்கு அதிருப்தி. தி.மு.க அரசு தெளிவுபடுத்துமா?

ஓ.பி.எஸ்ஸை கைவிட்ட தி.மு.க அரசு; அரசு ஊழியர்களுக்கு அதிருப்தி. தி.மு.க அரசு தெளிவுபடுத்துமா?

பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு, பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னர் இருந்தது. அது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாத காரணத்தால் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடாததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க ஊழியர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை நினைவுப்படுத்தியிருக்கிறார்கள்.

புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்கிற வாக்குறுதி, தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தை பெற்றிருந்தது. அரசுத்துறைகள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2004க்கு பின்னர் அரசுப்பபணிகளில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு இதுவே முக்கியமான காரணமாக இருந்ததாக சொல்லப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன் வரை பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றி தி.மு.க தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. மூன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் இதுவரை ஓய்வூதியத் திட்டம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுபடியும் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்று நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், மக்களவையில் அறிவித்திருந்தார். திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று எங்களுக்கு ஏராளமான கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அப்படியொரு திட்டம் எங்களிடம் இல்லை என்பதை மறுத்திருக்கிறார்.

பா.ஜ.க தவிர்த்த மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் போன்ற காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அரசியல் பிரச்னையாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. காங்கிரஸ் வழியில் பல மாநிலக்கட்சிகளும் இதை

செய்வதற்கு தயாராக இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை சரி செய்ய தயாராக இருக்கிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை நவீனப்படுத்தும் பல முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ஓய்வுக்கு பிந்தைய காலத்தில் என்ன செய்வது என்கிற கவலைதான் அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

என்.பி.எஸ் திட்டத்தில் அரசின் பங்களிப்பை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்துவது, பென்ஷன் பண்ட் உள்ளிட்டவற்றை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்றுவதற்கு வழி செய்வது, என்.பி.எஸ் கணக்கிலிருந்து வெளியே எடுக்கும் பணத்திற்கு முழுமையாக வரி விலக்கு தருவது போன்ற விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஆக, பா.ஜ.க ஓ.பி.எஸ்ஸை எப்போதோ விட்டுவிட்டு, வேறு பாதைக்கு சென்று விட்டது. ஆனால், தி.மு.கவிடம் ஏனோ தடுமாற்றம் தெரிகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com