இனி தமிழக அரசு பஸ்களில் குழந்தைகளுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

அரசு பேருந்து
அரசு பேருந்து

தமிழ்நாட்டில் அரசு பஸ்களில் இனி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை, அவர்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழக அரசு ஏற்கனவே அரசு பஸ்களில் அனைத்து மகளிர்களுக்கான இலவச பயண திட்டத்தினை அறிவித்திருக்கிறது. இந்த திட்டம் மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர்களுக்கான இலவச பயண திட்டம் தமிழகம் உட்பட வேறு சில மாநிலங்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது குழந்தைகளுக்கான இத்திட்டமும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

இதை வயது வரம்பினை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது. மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com