தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கிப்ட் என்ன  தெரியுமா?

தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கிப்ட் என்ன தெரியுமா?

ன்று 70வது பிறந்தநாள் காணும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்கியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர், அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்குக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொண்டர்களிடமும் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.

பின்னர், மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில்  நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை வலியுறுத்தியும் இதனை முதலமைச்சர் முன்னெடுத்துள்ளார்.

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்தி விட்டு செல்லும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றையும் வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com