சென்னையில் சொந்த வீடு கனவா? எத்தனை சதவீதம் விலை உயர்வு தெரியுமா?
சென்னையில் கட்டுமானத்தொழில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் முதல் அலையின்போது கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து வளர்ச்சி காண ஆரம்பித்தது.
தற்போது சென்னையின் பல பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் உருவாகியுள்ளன. ஏற்கனவே உள்ள வீட்டை இடித்துவிட்டு, புதிதாக கட்டும் பணிகளை ஒவ்வொரு பகுதியிலும் காண முடிகிறது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பிளாட் விலை உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இரும்பு, சிமெண்ட், காப்பர் வயர், எலெக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.
இதன் காரணமாக பிளாட் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்கிறார்கள். பிளாட் விலை குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் கட்டுமானப் பணி நிறைவடைந்தாலும் பிளாட் விற்கப்படாமல் இருக்கும் நிலை இருந்து வந்தது. குறிப்பாக, கிழக்கு கடற்கரையோரச் சாலையோரம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பல பிளாட்ஸ் வாங்க ஆளில்லாத நிலை இருந்தது. கொரோனா தொற்றுப் பரவலுக்கு பின்னர் இது மோசமான நிலையை அடைந்தது.
ஐ.டி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து புலம் பெயர்ந்து தங்களுடைய சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார்கள். இதன் விளைவாக, பல புதிய கட்டிடங்களை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டது. வங்கிகள் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடன் தருவதற்கு தயாராக இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பில்லை.
கொரானா தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட தொழில், சுற்றுலாத்துறையும் ரியல் எஸ்டேட் துறையும்தான். கொரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பினாலும் ரியல் எஸ்டேட் பழைய நிலையை அடைவதற்கு இன்னும் பலகாலம் ஆகும் என்று சென்ற ஆண்டு கணிக்கப்பட்டது. ஆனால், ரியல் எஸ்டேட் உயரும் பட்சத்தில்தான் கொரானாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டதாக கருத முடியும் என்றார்கள்.
தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த பிளாட் புக்கிங், கடந்த ஆண்டு இறுதியில் மீண்டெழுந்திருக்கிறது. இதனால் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையில் நம்பிக்கை கீற்று எழுந்திருக்கிறது.
கடந்தஐந்தாண்டுகளில்முன்னெப்போதும்இல்லாதஅளவுக்குவிற்கப்படாதபிளாட்எண்ணிக்கைமிகக்குறைவானநிலையைஎட்டியிருக்கிறதுஎன்கிறதுசமீபத்தில்எடுக்கப்பட்டஆய்வு. இன்னும்ஓராண்டுக்குள்சகஜநிலைமைதிரும்பிவிடும்.