மதிமுகவின் புதிய தலைமைப் பொறுப்பேற்கிறார் துரை வைகோ?!

மதிமுகவின் புதிய தலைமைப் பொறுப்பேற்கிறார் துரை வைகோ?!

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மதிமுகவின் பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில காலமாக வைகோவுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து கூறிவரும் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு பதிலாக, புதிய அவைத் தலைவராக கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மதிமுகவில், ‘முதன்மைச் செயலாளர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதற்கு தற்போது மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் துரை வைகோ நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவை தவிர, இந்தத் தேர்தலில் மதிமுகவின் பொருளாளராக இருந்து வரும் கணேசமூர்த்தி, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com