சட்டப்பேரவையில் சரமாரியாக கேள்வி கேட்ட எடப்பாடி! சரவெடியாக பதிலளித்த ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நேற்று 3வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. காலை 10 மணிக்கு அவை தொடங்கியது எதிர்க்கட்சி அறையில் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது அவைக்குள் சென்றார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி பேச ஆரம்பித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், உங்களுக்கான வாய்ப்பு வரும் போது வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்து போனதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து பட்டியல் வைத்துள்ளேன். அவர் பேசிய பிறகு நான் உரிய பதிலளிக்கிறேன் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதியுங்கள் நான் ஓடி ஒளிய போவதில்லை. தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Edapadi palaniswamy
Edapadi palaniswamy

அதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெண் காவலர் மீது இரு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் காவலர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பது வருத்தத்திற்குரியது. மக்கள் மட்டுமல்ல, காவலர்களும் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், பெண் காவலர் புகார் அளித்ததும் FIR போடப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் பதிவான வழக்கு விசாரணைக்குட்படுத்த பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். 72 மணி நேரத்தில் கைது செய்து அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா? என கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com