தேவர் ஜெயந்தி விழாவுக்கு பசும்பொன் செல்லவில்லை; எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் என்ற ஊரில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வந்திருந்து மரியாதை செலுத்துவார்கள்.

இதற்கிடையில், கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் மற்றும் கவசத்தை வழங்கினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இந்த கவசத்தை தங்களிடம்தான் வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த் மதுரை உயர்நீதிமன்றக் கிளை, தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம்  மாவட்ட வருவாய் அலுவலரிடம்  ஒப்படைக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், முத்துராமலிங்க தேவரின் 115வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 60வது குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு செல்லவில்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதில் தெரிவித்ததாவது;

தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு இம்மாதம் 30-ம் தேதி காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்  முத்துராமலிங்க தேவரின்  நினைவிடத்தில் அதிமுக தலைமை செயலாளர்கள் , முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துவர்.

மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமி இந்த முறை தேவர் பூஜையில் கலந்துகொள்ள பசும்பொன் செல்லாமல்,  சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com