ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டி, தி.மு.க எதிர்ப்பில் உக்கிரமாகும் எடப்பாடி தரப்பு - இடைத்தேர்தல் எபெக்ட்?

ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டி, தி.மு.க எதிர்ப்பில் உக்கிரமாகும் எடப்பாடி தரப்பு - இடைத்தேர்தல் எபெக்ட்?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும், கொங்கு மண்டல அ.தி.மு.கவினர் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி என முக்கியமான தலைவர்களெல்லாம் செயல் வீரர்கள் கூட்டத்தில் பிஸியாகிவிட்டார்கள்.

வில்லரசம்பட்டியில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.கவினரின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.கவினர் பொய்யான வாக்குறுதிகளை தந்து தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நிர்வாகிகளும் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பொங்கல் பரிசாக நாங்கள் 2500 ரூபாய் கொடுத்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐயாயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்களால் 2500 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை என்று நிர்வாகிகள் பேசியபோது கூட்டத்தில் நல்ல கைதட்டல்.

எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையோடு இருந்ததால் அசட்டையாக இருந்துவிட்டோம். தேர்தல் முடிவுகள் வெளியானபோது 150 தொகுதிகளில் முன்னணியில் இருந்தோம். ஏறக்குறைய 30 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றதால் தோல்வியை தழுவிவிட்டோம் என்று முன்னாள் அமைச்சர் பேசியபோது கூட்டத்தில் அமைதி.

அடுத்து பேச வந்த இன்னொரு அமைச்சரோ, வழக்கம்போல் கள்ள ஓட்டுதான் தி.மு.கவின் வெற்றிக்கு காரணம். இனி நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார். அதே நேரத்தில் கள நிலைமையைத்தான் அ.தி.மு.கவினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதும் தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் 20 சதவீத வாக்காளர்கள் வெளியூரில் பணிபுரிவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்று, இந்தத் தொகுதி அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் பெறும் வெற்றி, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கவேண்டும் என்று நம்பிக்கையோடு பேசியிருக்கிறார், செங்கோட்டையன்.

ஓ.பி.எஸ் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதுதான் எடப்பாடி தரப்பிற்கான பெரிய சவாலாக அமையப் போகிறது நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தி.மு.கவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார்கள். தி.மு.க வெற்றிக்காக உழைக்கப்போகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியிருக்கிறார். இது ஓ.பி.எஸ் தரப்பிற்கு வைக்கப்பட்டுள்ள செக். இனி, ஸ்டாலின் அரசை எதிர்த்து, ஒ.பி.எஸ் ஏதாவது விமர்சனம் செய்தாக வேண்டும். வேறு வழி?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com