ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பம்!

ரேஷன் கடை
ரேஷன் கடை

ரேஷன் கடை வேலைக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 என குறைந்தபட்ச கல்வித் தகுதியே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்ஜினியரிங், முதுகலை பட்டதாரிகள் என பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 முதல் 350 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

கல்வித் தகுதியாக விற்பனையாளர் பதவிக்கு பிளஸ் 2 , எடையாளர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நேர்காணல் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி நாளாக, நவம்பர் இரண்டாவது வாரம் வரை அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இதுவரை இன்ஜினியரிங் பட்டதாரிகள், முதுகலை பட்டதார்கள் என பலரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடை வேலைக்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கூட்டுறவு, பொது வினியோக திட்டம் தொடர்பான பாடங்களை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com