கொரோனாவிலிருந்து மீண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

கொரோனாவிலிருந்து மீண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

சென்ற மார்ச் மாதம் 15ம் தேதி இரவு திடீரென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், பிறகு அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதை மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்ததாகவும், அதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையிலிருந்து தகவல்கள் வெளியாகின.

தற்போது ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார். ‘இதய பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்’ என போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com