டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது! டி.டி.வி.தினகரன் கருத்து!

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியாகி, அதன் செய்திகள் தமிழக அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அரசியல் தலைவர்களும், அறிக்கை குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் தஞ்சாவூரில் டி.டி.வி தினகரனும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதிகள் தயாரித்தது போன்று உள்ளது. இதனை சி.பி.ஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இதில் அரசியல் இருக்கிறது" என டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

சசிகலா, ஜெயலலிதா , டி.டி.வி தினகரன்
சசிகலா, ஜெயலலிதா , டி.டி.வி தினகரன்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது" - என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மை என்ன என்பது நன்றாகவே தெரியும். இந்த அறிக்கையைத் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம். அரசியல் ரீதியாகத் தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது. இதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com