மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு!
EB

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் 15-ம் தேதி துவங்கப்பட்டது. 2கோடியே 67 லடசம் மின் நுகர்வோர் தங்கள் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் இருந்தது. பின்னர் இது வரும் 31-ம்தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 30ம் தேதி வெளியாகலாம் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EB
EB

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தற்போது தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைத்தால் தான், மின்சார கட்டணம் கட்ட முடியும் என்ற அறிவிப்பு வெளியானது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் கூட நடைபெற்றது.இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com