அக்ரிசக்தி அமைப்பின் “வானும் மண்ணும் -2023” நிகழ்வில் விவசாயிகள் மகிழ்ச்சி.

அக்ரிசக்தி அமைப்பின் “வானும் மண்ணும் -2023” நிகழ்வில் விவசாயிகள் மகிழ்ச்சி.

விவசாயிகள் நம் நாட்டின் கண்கள். மண்ணின் மகத்துவமான விவசாயம் குறித்த இரண்டு நாள் சர்வதேச வேளாண் அறிவியல் மாநாடு கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சர்வதேசப் பள்ளியில் ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து வந்த விவசாயிகள் எராளமானோர் கலந்து பயன்பெற்றனர்.

     பயிலரங்கங்கள்  கண்காட்சிகள் கருத்தரங்கங்கள் போன்ற பிரிவுகளில் நடந்த மாநாட்டில் விவசாயிகளுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்குபெற்று விவசாய த்தின் அருமை பெருமைகளை அறிந்தனர்.

        இந்த சர்வதேச வேளாண் மாநாட்டில் கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விடை காணும் கருத்தரங்கு. கோழி வளர்ப்பில் இலாபம் ஈட்ட பின்பற்ற வேண்டிய நுட்பங்கள். மூலிகை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் கருத்தரங்கம். யானை மனித எதிர்கொள்ளல், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும். கருத்தரங்கம், கலந்துரையாடல். உழவர்களின் பொருட்களை மதிப்பு கூட்டும் மரபுசுவை தின்பண்டங்கள். மருத்துவர்களின் விவாதக்களம், பூச்சு மருந்து அடிப்பதால் ஏற்படும் தீமைகள் போன்ற பல நுண்ணிய தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் உரையாடியது விவசாயம் மேல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், உடல் நலன் காக்கும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆரோக்கிய உணவு மற்றும் உடல் நலம் குறித்த கருத்தரங்கு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.

      மேலும், விவசாயம் சார்ந்த கண்காட்சியில் வேளாண் தீவன விதைகள், வேளாண் உபகரணங்கள் , இடுபொருட்கள், நவீனமுறை விவசாயம் குறித்த புரிதல் என மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகள் வேளாண் கல்லூரி மாணவர்கள் பெண்கள் உள்பட பலரும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

      இந்த மாநாட்டில் தமிழக விவசாய வல்லுனர்களுடன் இலங்கை சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, போன்ற வெளிநாட்டு வேளாண் அறிஞர்களும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பயிற்சிகளையும் அளித்தது  சிறப்பு.

இதற்கான ஏற்பாடுகளை அக்ரி சக்தி நிறுவனர் செல்வமுரளி ஒருங்கிணைத்து தலைமையும் வகித்தார். அவருடன் இந்த அமைப்பின் பொறுப்பாளர்களும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற ஆவன செய்தனர் .

       இது போன்ற விவசாயம் குறித்த மாநாடுகளையும் பயிற்சிகளையும் கண்காட்சிகளையும் விவசாய அமைப்பினர் கையிலெடுத்து நடத்தினால் பெருமளவு விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர் பயன்பெறுவதோடு நம் விவசாயமும் செழிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com