வைகை அணை
வைகை அணை

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 தமிழகத்தில் 5 மாவட்டகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5 ஆயிரத்து 399 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com