அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் ஏன்?!

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், அவரது சொத்துக்களியும் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து  சி.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தனது வங்கிக் கணக்கை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்ததார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதில் வருமான வரித்துறை சார்பில் வாதிட்டபோது, விஜயபாஸ்கர் முறையான வருமானவரி செலுத்தாததால் அவரது சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக வருமானவரித்துறை விளக்கமளித்தது.

இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com