வெ. இறையன்பு
வெ. இறையன்பு

தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிக்கு இலவசப் பயிற்சி!

 சென்னை: தலைமைச் செயலக பணிக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் - 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதற்கு இம்மாதம் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

 இந்த இலவசப் பயிற்சி குறித்து தலைமைச் செயலரும் தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத் தலைவருமான இறையன்பு தெரிவித்ததாவது:

 டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ பிரிவில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான 161 காலி இடங்கள் உள்ளன. இதற்கு அமைச்சுப் பணி, நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்களை கொண்டு பணிமாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது.

இத்தேர்வுக்கு சென்னை பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள சர் தியாகராயா கல்லூரி, மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்குபெற இம்மாதம் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 அந்த வகையில் இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன், சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் நேரடியாக வழங்கலாம். அல்லது ceccnandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com