ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து
ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து

செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகரில் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர்ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட் உள்ளது. அங்கு எதிர்பாராத விதமாக இன்று ஃபிரிட்ஜ் வெடித்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

வெங்கட்ராமன் என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார். அவருக்கு திதி கொடுப்பதற்காக துபாயிலிருந்து அவரது உறவினர் தாம்பரம் பகுதிக்கு வந்தனர்.

இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபொது நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதும் அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு விட்டு பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது மூச்சு திணறி கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு, விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர். இது குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com