குப்பை டிரக், ஜி.பி.எஸ் மயமாகிறது - கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்டம்!

குப்பை டிரக், ஜி.பி.எஸ் மயமாகிறது - கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்டம்!

கோவை மாநகராட்சி, குப்பை சேகரிப்பதிலும் அவற்றை துரிதாக அகற்றுவதிலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்த களமிறங்கியிருக்கிறது. கோவை மாநகரம் முழுவதும உள்ள குப்பை வண்டிகளில் இனி ஜி.பி.எஸ் டிராக்கிங் வசதி இடம்பெறுகிறது.

குப்பைகளை சேகரிக்கவும், அவற்றை மறு சூழற்சி செய்யவும் மாநகரம் முழுவதும் டிரக் மூலமாக குப்பைகளை அள்ளி வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் குப்பை டிரக், மாநகரம் முழுவதிலும் இருந்து தினமும் 1000 டன் குப்பைகளை அகற்றி வருகிறது.

தற்போது 351 குப்பை டிரக் பணியில் இருக்கின்றன. இதில் ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் குப்பை வண்டி எங்கே பணியில் இருக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். தேவையான இடத்தில் வந்து குப்பைகளை சேகரிக்குமாறு தகவல் அனுப்பி, குப்பைகளை உடனே சேகரிக்க ஏற்பாடு செய்யவும் முடியும்.

மக்கள் தொகை கூடுதலாக உள்ள பகுதிகளில் கூடுதல் டிரக் அனுப்பவும். போக்குவரத்து நெருக்கடி உள்ள இடங்களுக்கு ஏற்ப மாற்று வழிகளில் டிரக்கை இயக்கவும் ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம் பெரிதும் உதவும். குறைவான வாகனங்களில் அதிகமான குப்பைகளை ஏற்றி, கோவையில் உள்ள 20 குப்பை மையங்களுக்கு மறுசீராக்கம் செய்ய அனுப்பப்படுகின்றன.

கோவை மாநகராட்சி, ஜிபிஎஸ் பொருத்துவதாக முடிவெடுத்த பின்னர், சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கென தனியாக குப்பை டிரக் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள்.

ஒரு சில குப்பை அள்ளும் வாகனங்கள், குறிப்பிட்ட அபார்ட்மெண்ட். திருமண மண்டபங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் சென்ற முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோது குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இதையெல்லாம் தவிர்க்கவே குப்பை அள்ளும் எந்திரங்களில் தற்போது ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்படுகிறது. தினமும் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் கோவை மாநகராட்சியில் நாளுக்கு நாள் குப்பைகள் அதிகரித்தபடி இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com