குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் அரசுத்துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களை டிஎன்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அதில் குரூப் 1, குரூப் 2 ,2 ஏ, குரூப் 4 என பல்வேறு பதவிகளுக்காக 7,301 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. டிஎன்.பி.எஸ்.சியின் இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வு நடைபெற்று கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. எனினும், இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்சி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாதது தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்வை எழுதுவதற்காக சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததே இதற்கு முன்பாக அதிக எண்ணிக்கையாக இருந்த நிலையில், அதை முறியடித்து இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கு சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வில் முறைகேடுகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி செய்து இருந்தது.

இதில் விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு போட்டித்தேர்வுகள் எழுதுபவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. குரூப் 4 தேர்வுகளை பல லட்சம் போட்டித்தேர்வர்கள் எழுதி வருகிறார். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு என்றாலும் இந்த தேர்வுக்கு முதுகலை கட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிப்பது உண்டு.

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக டி.என்.பி.எஸ்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்படும் பணியிடங்கள் எண்ணிக்கை 9,870- ஆக உயர்ந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சியின் இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருவதாகவும் வரும் ஜனவரியில் தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com