ரூபாய் நோட்டு அலங்காரத்தில் கவுண்டம்பாளையம் பரஞ்சோதி மாரியம்மன்!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் கவுண்டம்பாளையம் பரஞ்சோதி மாரியம்மன்!
Published on

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள பரஞ்சோதி மாரியம்மனுக்கு ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒட்டி 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த  மாதம். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது வழக்கம். அதன்படி தமிழகம் முழுக்க உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒட்டி அனைத்து அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பரஞ்சோதி மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 2000 ரூபாய் 500 ரூபாய் 200 ரூபாய் 100 ரூபாய் 50 ரூபாய் இருபது ரூபாய் மற்றும் பத்து ரூபாய் என மொத்தம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் மாலைகள் ஆகவும் ரூபாய் நோட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தது சிறப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com